மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு – ஆகஸ்ட் 27ல் தீர்ப்பு!!

0
chennai high court
chennai high court

மருத்துவ மேற்படிப்புகளில் பிறப்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

மருத்துவ இடஒதுக்கீடு:

தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில் தமிழகத்தில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உள்ளது. இதனை 27 சதவீதமாக குறைத்து மத்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

மருத்துவர்
மருத்துவர்

அதில் 50% இடஒதுக்கீடு பிறப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here