ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி சாதா டிக்கெட் போதும்! ரிசர்வ் Coach லும் போகலாம்! சூப்பர் முடிவு!!

0
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி சாதா டிக்கெட் போதும்! ரிசர்வ் Coach லும் போகலாம்! சூப்பர் முடிவு!!
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி சாதா டிக்கெட் போதும்! ரிசர்வ் Coach லும் போகலாம்! சூப்பர் முடிவு!!

ரயில் பயணிகள் இனி சாதாரண டிக்கெட் வைத்திருந்தாலே, முன்பதிவு வசதி கொண்ட பெட்டிகளிலும் பயணம் செய்யலாம், என்பதை நடைமுறைப் படுத்த ரயில்வே ஆலோசித்து வருகிறது.

சூப்பர் அப்டேட்:

நாடு முழுவதும் பெரும்பாலான பயணிகள் தொலைதூர பயணத்திற்கு ரயில் சேவையை அதிகம் தேர்வு செய்கின்றனர். ஒரு சில பயணிகள், இதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது உண்டு. இது போன்ற முன்பதிவு பெட்டிகளில், சாதாரண டிக்கெட் பெற்றவர்கள் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். தற்போது, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, தொலை தூரம் செல்லும், படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளில் 80% க்கும் குறைவாக முன்பதிவு ஆகாத ரயில்களை கணக்கெடுக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, நிரம்பாத பெட்டிகளில் சாதாரண டிக்கெட் பெற்றவர்களை பயணிக்க அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்கலாம் என நம்பப்படுகிறது.

மக்களை வியப்பில் ஆழ்த்திய திருநங்கை.., முதல் முறையாக படைத்த சாதனை.., கலெக்டர் பாராட்டு!!

இந்த திட்டம் அமலானால், சாதாரண டிக்கெட் பெற்ற பயணிகளும், படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளில் அபராதமின்றி பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால், கூட்ட நெரிசல் மிகுந்த காலங்களில் பயணிகளின் சிரமம் குறையும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here