
நாடு முழுவதும் கொரோனா நோய் அடுத்தகட்ட தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் நேற்று மட்டுமே சுமார் 3,000 மேலானோர்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் காரைக்கால் அருகில் உள்ள பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த 8 மாணவர்களுக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் தலைமையில் இம்மாணவர்களை தனிமைப்படுத்தலில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
FIFA உலக கோப்பைக்கான வாய்ப்பை இந்தியா பெறுமா?? ஆசிய தொடரில் பலம் வாய்ந்த அணிகளுடன் இடம்!!
மேலும் கல்லூரிகளில் முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிலைமை கட்டுப்பாட்டை மீறி விடாமல் இருக்க இக்கல்லூரிக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்து விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.