
இந்தியாவில் 2023-24ம் கல்வியாண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்களுக்கு தமிழ். ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, ஜம்முவில் புவியியல் தேர்வும், பஞ்சாபில் NIOS தேர்வும் நீட் தேர்வுக்கு முந்தைய மற்றும் அடுத்த தினங்கள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வுக்கும் மற்ற போர்டு தேர்வுகளுக்கும் இடையே குறைந்தது 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
ஆச்சாரமாக மனோபாலா மனைவி, மகன், மருமகளுடன் எடுத்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!
டிசம்பரில் தொடங்க உள்ள வகுப்புக்கு இப்போதே நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. நாங்கள் நீட் நுழைவுத்தேர்வு வேண்டாம் என கூறவில்லை. ஒத்திவைக்க அவகாசம் கேட்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு தேர்வர்கள் பலரும் இணையத்தில் தங்கள் ஆதரவுகளை பதிவிட்டு வருவதால் கூடிய விரைவில் மத்திய அரசு தகுந்த பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.