தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் குரூப் 4 போட்டித்தேர்வை கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தினர். 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் 18.36 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். பின்னர் 3,000 பணியிடங்கள் அதிகரித்து 10,117 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 9 மாதங்களுக்கு பிறகு வெளியிடப்பட்டதால் தேர்வர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இதற்கான பணியிடங்களை கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக தேர்வர்கள் பலரும் கூறுகையில், “கொரோனா காலம் முதல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருவதால் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மே 15ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை., வெளியான அறிவிப்பு!!!
2 ஆண்டு கொரோனா காலத்திற்கு பிறகு கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வில் 30,000 காலிப்பணியிடம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து இருந்தோம். அதாவது 2018ம் ஆண்டு 12,000, 2019ம் ஆண்டு 10,000 என பணியிடங்கள் அறிவித்து விட்டு 3 ஆண்டுகள் கடந்த பிறகும் 10,117 பணியிடம் தானா?. எனவே நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் இன்னும் கூடுதலாக பணியிடங்கள் தேர்வாணையம் ஒதுக்க வேண்டும்.” என தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் பணியிடங்களை தேர்வாணையம் அறிவிக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.