வேளச்சேரியில் தொடங்கியது மறுவாக்கு பதிவு – இரவு 7 மணி வரை நடைபெறுகிறது!!

0
சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் - பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்ற திமுக!!
சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் - பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்ற திமுக!!

தமிழகத்தில் வேளச்சேரி தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடந்த 6ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக தற்போது வேளச்சேரி தொகுதியில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

மறுவாக்கு பதிவு

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதியிலும் ஒரே நாளில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. கொரோனா பரவலுக்கு மத்தியில் மிக சிறப்பாக சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்நிலையில் கடைசி நேரத்தில் ஓர் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் வேளச்சேரி தொகுதியில் அரங்கேறியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது வேளச்சேரி தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக அங்குள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்த தொகுதியில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. கோரிக்கைகளுக்கேற்ப வேளச்சேரி தொகுதியில் இன்று(ஏப்ரல் 17) மறுவாக்கு பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாக்கியாவின் பிஸ்னஸிற்காக கோபியிடம் பேசும் இனியா – விறுவிறுப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியல்!!

தற்போது அந்த வகையில் வேளச்சேரியில் மறுவாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று இரவு 7 மணி வரை நடைபெறும். இந்நிலையில் வாக்குப்பதிவு மையத்தில் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புகளுடன் கொண்டு வரப்பட்டது. ஆண்களுக்கான வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் மறுவாக்கு பதிவு செய்யும் அனைவருக்கும் நடுவிரலில் மை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here