இனி இவங்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டு கட்.., மாநில முதல்வர் அதிரடி தகவல்!!!

0
இனி இவங்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டு கட்.., மாநில முதல்வர் அதிரடி தகவல்!!!
இனி இவங்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டு கட்.., மாநில முதல்வர் அதிரடி தகவல்!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் உணவு பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சலுகைகளை வசதி படைத்தவர்களும் பெற்று வருவதாக தகவல் வெளிவந்தது. இதனால் தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி ரேஷன் கார்டில் ஒரே பெயர் இருமுறை, இறந்தவர்கள் என சுமார் 97 ஆயிரம் பேர்களை நீக்கம் செய்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர், 5 ஏக்கர் பாசன நிலமுடையவர், அரசு உரிமம் பெற்ற நிறுவன உரிமையாளர், 5 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனம் உள்ளவர் என வசதிப்படைத்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் விரைவில் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டும்.., அடம்பிடித்த மீனா.., இரண்டாம் திருமணம் குறித்து சுவாரஸ்ய தகவல்!!

அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது போல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி என 20 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருவதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here