ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி 119 லட்சமாக அதிகரிப்பு..! மத்திய அரசு தகவல்..!

0
ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி 119 லட்சமாக அதிகரிப்பு..! மத்திய அரசு தகவல்..!
ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி 119 லட்சமாக அதிகரிப்பு..! மத்திய அரசு தகவல்..!

ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி 38 லட்சத்தில் இருந்து 119 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவங்களின் எண்ணிக்கையும் 22 லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு – தேசிய ஆய்வு குழு விளக்கம்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா நோய்த் தொற்று இறப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா,100 ஆண்டுகளில் மனித இனத்தை தாக்கியுள்ள மிக கொடூர வைரஸ் என கணிக்கப்படும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது.45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், 2-வது அலையின் தீவிர தாக்கம்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அனைத்து தரப்பு மக்களையும் இந்த மருந்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இந்த மருந்தால் இறப்பு விகிதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.ஆனால் இந்த ரெம்டெசிவர் மருந்துகளைக் தவறான முறையில் கள்ளச் சந்தையில் சிலர் விற்று வருகின்றனர், அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி 119 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மே 16 ஆம் தேதி நிலவரப்படி மாநில அரசுகளுக்கு 76 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை மே 23 ஆம் தேதி வரை ஒதிக்கீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here