கொரோனா பரவல் எதிரொலி – மதுரையில் 5-வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

0

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது விற்பனை தொடங்கியுள்ளது. மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து 

சென்னையை தொடர்ந்து மதுரையில் 8மே 2021 முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது துவங்கியுள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது தொடங்கியுள்ளது. 500 குப்பிகள் இன்று விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 குப்பிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்க செய்வதற்கு அரசு திண்டாடி வருகிறது. உலகிலே அதிக மக்கள் கொண்ட நாடு என்பதால், மருந்தைக் கொஞ்ச கொஞ்சமாக விநியோகித்து வருகிறது. அதை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்தை குப்பையில் போட்டுவிட்டு பின்பு அதனை வெளியில் எடுத்து அதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையில் நேற்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு டோன்கள் வழங்காத நிலையில் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் மக்கள் வீடு திரும்பினர். ஒரு டோக்கனுக்கு 4 மருந்து குப்பிகள் வழங்கப்பட்ட நிலையில் இப்போது மக்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப இப்போது 6 வழங்க பட்டுவருகின்றது.

5வது நாளான இன்று நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் தினமும் மருத்தவமனைக்கு வந்து மருந்து வாங்காமல் திரும்பி செல்ல வேண்டிய அவல நிலையில் மதுரை உள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here