ST அந்தஸ்து கோரிய விவகாரம்: உயிரிழந்த 60 பேருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்., முதல்வர் அறிவிப்பு!!!

0
ST அந்தஸ்து கோரிய விவகாரம்: உயிரிழந்த 60 பேருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்., முதல்வர் அறிவிப்பு!!!
ST அந்தஸ்து கோரிய விவகாரம்: உயிரிழந்த 60 பேருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்., முதல்வர் அறிவிப்பு!!!

கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இன மக்கள் தங்களுக்கு ST அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் பழங்குடி மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த மே 3ம் தேதி அம்மாநிலத்தில் இருதரப்பினருக்கும் இடையே வன்முறை வெடிக்க தொடங்கியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

1,700 வீடுகள் தீக்கு இரையானது. 231 பேர் படுகாயத்துடனும் 60 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 10,000 பாதுகாப்பு படையினர், அசாம் ரைபிள் என பதற்றத்துடன் காணப்படுகிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?? RCB அணியை சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும் MI!!

இந்நிலையில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “மாநிலத்தில் வன்முறையை விடுத்து அமைதியை நிலைநாட்ட போராட்டக்குழுவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். இது போக சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.25,000 மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு ஆய்வுகளின் அடிப்படையில் ரூ.2 லட்சம் வரை நிவாரண தொகை வழங்க உள்ளோம். போராட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here