மிக்ஜாம் புயல் எதிரொலி.., ரேஷன் கார்டு இல்லாதவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ரேஷன் அட்டை இல்லாதவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணத் தொகை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் தனித்தனியாக ரேஷன் கடைகளில் நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது வரை 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அதன்படி வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கான கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த உடன் தகுதியானவர்களுக்கு நிவாரணத் தொகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here