திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி … தமிழக முதல்வர் அறிவிப்பு !!!

0

கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள  திருநங்கைகளுக்கு  ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் திருநங்கைகளுக்கு அரசு, இந்த நிவாரண உதவித்தொகை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சற்றே மீட்டு எடுத்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவால் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை இழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்குவது,மளிகை தொகுப்பு என அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அரசு மட்டுமல்லாமல் தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் என பலரும் தங்கள் தரப்பிற்கு தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.

அவ்வாறாக இருக்க தற்போது தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை கொண்டு உள்ள திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 அளிக்கப்படும் என்றும் ரேஷன் அட்டை இல்லாத  8,495 திருநங்கைகளுக்கு அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பானது திருநங்கைகளுக்கு சற்றே நிம்மதி அளித்து உள்ளது என்றே கூறலாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here