என்னது..இவருக்கே இந்த நிலைமையா.. கொரோனாவால் பூஜ்ஜியமான முகேஷ் அம்பானி சம்பளம்!!!

0

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி நாட்டில் நிலவி வரும் கொரோனா பாதிப்பால்  வர்த்தகம் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக மார்ச் 31, 2021ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தை முழுமையாக மறுத்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை தொடங்கியது. இதையடுத்து செப்டம்பரில் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. பின்னர் கோவிட்-19 இரண்டாவது அலை தீவிரம் காட்டத் தொடங்கியது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

இந்த பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, இந்த வருடம் கொரோனா காரணமாக ரிலையன்ஸ் ஊழியர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி தனது சம்பளத்தை முழுமையாகக் கைவிட்டு உள்ளார்.  கடந்த 15 வருடமாக, தனது பணிக்காக வருடம் 15 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்று வருகிறார்.

பாலிமர், டெலிகாம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு எனப் பல துறையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பங்கு மதிப்பு பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது. ஆனால் இவரது ஜியோ மற்றும் ரீடைல் பங்கு மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here