முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியல் – தமிழக முதல்வர் வெளியீடு!!

0

திமுகவில் அண்ணா பிறந்த நாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என மூன்று நாட்களையும்  கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. மேலும்   இதற்கான விருது பெறுபவர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

முப்பெரும் விழா:

ஒவ்வொரு ஆண்டும் செப் 15 ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழாவானது நடத்தப்படும்.  இந்த விழாவில் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவர். தற்போது இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவானது ஒரு மாநாடு போல நடைபெறும் ஆனால் இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் விதிமுறைகளை பின்பற்றி இந்த விழாவானது  நடைபெறுகிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து கூறியதாவது, செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க உள்ளதாகவும், 16ஆம் தேதி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2021ம் ஆண்டுக்கான முப்பெரும் விழாவின் விருதுகள் பெறுவோரின் பட்டியலை தற்போது  திமுக அறிவித்துள்ளது. இதில் பெரியார் விருது – மிசா பி.மதிவாணன், அண்ணா விருது – எல்.மூக்கையா, கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு, பாவேந்தர் விருது – வாசுகி ரமணன், பேராசிரியர் விருது- பா.மு.முபாரக் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here