நாடு முழுவதும் வீட்டு மற்றும் வணிக உபயோக சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது. ஆனால் அதற்கு மாறாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் வணிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் வணிகர்கள் சற்று நிம்மதி அடையும் வகையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 1,999.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் தற்போது ₹57 குறைக்கப்பட்டு ரூ.1,942-க்கு விற்கப்பட்டு வருகிறது.