இதோ வந்தாச்சு அட்டகாசமான டிசைனில் ரெட்மி ஸ்மார்ட் டிவி – சிறப்பம்சங்கள் இதோ!!

0

ஸ்மார்ட்போன் வகைகளில் மிக பிரபலமாக திகழ்ந்து வரும் ரெட்மி நிறுவனம் தற்போது டிவி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் டிவி வெளிவரும் தேதியும் வெளியாகியுள்ளது.

ரெட்மி:

இந்த காலங்களில் ஸ்மார்ட்போன் மாடல்கள் பல வெளியாகி வருகிறது. அதில் பயனாளர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் தான் ரெட்மி. இந்த நிறுவனம் பயனாளர்களைக் தேவைக்கேற்ப பல அம்சங்களை தனது ஸ்மார்ட்போனாகளில் படைத்து அதனை வெளியிட்டு வரும். மேலும் அந்த அம்சங்கள் அனைத்தும் மக்களுக்கு மிக பிடித்த வகையில் இருக்கும். அதனாலே பயனாளர்களிடம் ரெட்மி என்றால் தனி வரவேற்பு இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் சிறந்து விளங்கிய ரெட்மி நிறுவனம் தற்போது டிவி தயாரிப்பிலும் தனது கால் தடத்தை பாதித்துள்ளது. அதன்படி இந்த நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் டிவி X65, ரெட்மி ஸ்மார்ட் டிவி X 55 மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி X 50 என மூன்று மாடல் டிவியை தயாரித்துள்ளது. மேலும் இந்த டிவி 125.7செமி, 138.8செமி மற்றும் 165.1செமி என மூன்று வித அளவில் தயாராகியுள்ளது.

மாத்தி மாத்தி குறைய மட்டும் சொல்லி வரும் திமுக மற்றும் அதிமுக – குழப்பத்தில் தமிழகம்!!

மேலும் மக்களை கவரும் வகையில் 4K HDR, 30W டப்லி ஆடியோ, DTS விர்ச்சுவல் X போன்ற பல அம்சங்களை பெற்றுள்ளது. தற்போது இந்த டிவி சந்தைக்கு வருகிற மார்ச் மாதம் 26ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் அம்ஸங்கள் மக்களை கவரும் வண்ணத்தில் இருப்பதால் இந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here