தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை மையம் அறிக்கை!
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை மையம் அறிக்கை!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்:

தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இம்மாதம் ஆடி மாதம் எனினும் இந்த மாதத்தில் அதிகமாக காற்று அடிக்கும் என்ற நிலைமை மாறி தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரளா போன்ற மலைப் பகுதியில் பெரும் பள்ளத்தாக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவைகள் ஏற்பட்டு வருகிறது.

இதனால் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள தாகவும் மற்றும் தமிழகத்தில் உள்ள சில மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடடடா.., சும்மா தளதளன்னு பப்பாளி பழம் மாதிரி இருக்கீங்களே கிரண்.., ரசிக்கும் இளசுகள்!!

அதாவது, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மதுரை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வச்சு செய்ய இருக்கும் கனமழை.. தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கனமழையின் காரணமாக நீலகிரி மற்றும் தேனியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பல கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் அபாயம் ஏற்பட்டால் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை,1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here