வாங்க மோடி! வணக்கம் மோடி!! பிரதமரை வரவேற்க வானதி சீனிவாசன் பாடிய பாடல்!!

0

கோவையில் நடைபெறவுள்ள பாஜக கட்சி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக “வாங்க மோடி! வணக்கங்க மோடி!!” என்று தொடங்கும் பாடல் ஒன்று கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வரவேற்பு பாடல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க இன்று கோவைக்கு பிரதமர் மோடியை வருகை தருகிறார். இன்று மாலை 5.30 மணி அளவில் கொடீசியா அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடியை வரவேற்று கட்சியின் சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

குறுகிய தூர ரயில்களின் கட்டணம் உயர்வு – இந்திய ரயில்வே அறிவிப்பு!!

“வாங்க மோடி!! வணக்கம் மோடி!! கொங்கு மக்கள் வரவேற்போம் மோடி!! நீங்கள் தந்த திட்டங்கள் மோடி!!” என்று தொடங்கும் இந்த பாடல் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனின் முயற்சியில் கட்சியின் கலை இலக்கிய பிரிவை சேர்ந்த உமேஷ் பாபு மற்றும் ஆர்கஸ்ட்ராவை சேர்ந்த ஷண்முகம் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். மோடியை வரவேற்றும் நலத்திட்டங்களை புகழ்ந்தும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் கொங்கு தமிழில் எழுதப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடலின் முதல் வரியை எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன், சி.டி.ரவி, முருகானந்தம் மற்றும் அண்ணாமலை ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் சில வரிகளை பாடகர்களோடு இணைந்து வானதி சீனிவாசனும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here