அவார்ட் நிகழ்ச்சில இதுக்காகவா அழுதீங்க அஷ்வின்?? நீ நல்லா இருக்கனும் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

0

தனியார் சேனலின் விருது வழங்கும் விழாவில் குக் வித் கோமாளி அஷ்வின் கண் கலங்கியது போல சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதற்கான காரணம் என்னவென்று குழம்பியதற்கு விடையாக வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் அஷ்வின்

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி பிரபலமானதிலிருந்து மக்கள் மத்தியில் அஷ்வினை பற்றி பேசாத ஆள் இல்லை. சொல்லப்போனால் அஷ்வினை பார்ப்பதற்கே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரசித்து வருகின்றனர். அஷ்வினை அந்த அளவுக்கு பிரபலமாக்கி இருக்கிறது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்பாக அஷ்வின் கொடுத்த உண்மையான உழைப்பிற்கு இப்போது தான் பலன் கிடைத்துள்ளது. என்னவென்றால் சமீபத்தில் ஒரு தனியார் சேனல் நடத்திய விருது விழாவில் அஷ்வினுக்கு விருது கிடைத்துள்ளது. இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அப்போது வலைதளங்களில் வைரலாகியது.

எனக்கு இப்போ தான் குழந்தை பிறந்திருக்கு, நான் எப்படி பிக் பாஸ் வருவேன்’ – நகுல் பளிச் பேட்டி!!

அந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சியின் பிரபலம் என்ற விருது அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக விருது மேடையில் அஷ்வின் கண்கலங்கியது போலவும், புகழை கட்டிப்பிடித்து அழுதது போலவும் புகைப்படங்கள் வெளியானது.

அதற்கான காரணம் ஏதும் தெரியாமல் அஷ்வின் ரசிகர்கள் புலம்பி வந்தனர். ரசிகர்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும்படியாக அந்த மேடையில் நடந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அஷ்வின் விருது பெற்றதும், எமோஷனலான சீன் ஒன்றை நடித்து காட்ட சொல்லி கேட்கப்பட்டிருந்தது.

அப்போது தான் அழுதுகொண்டே தத்ரூபமாக நடித்துள்ளார் அஷ்வின். அது நடிப்பாக இருந்தாலும் நடித்தவாறு தெரியவில்லை, அஷ்வின் நிஜமாகவே அழுதது போல தான் இருந்தது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக அஷ்வின் அழுத அந்த காட்சியை பார்த்த பல கண்கள் நிரம்பிவிட்டன என்றே சொல்லலாம்.

தற்போது அஷ்வினின் வெற்றியை அவரை விட உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் அஷ்வின் ரசிகர்கள். தொடர்ந்து அஷ்வினுக்கு வலைதளங்களிலும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here