அஸ்வினால், முகமது ஷமிக்கு ஏற்பட்ட நிலைமை.., T20 உலக கோப்பையில் இடம்பெறாததுக்கு இது தான் காரணமா?

0
அஸ்வினால், முகமது ஷமிக்கு ஏற்பட்ட நிலைமை.., T20 உலக கோப்பையில் இடம்பெறாததுக்கு இது தான் காரணமா?
அஸ்வினால், முகமது ஷமிக்கு ஏற்பட்ட நிலைமை.., T20 உலக கோப்பையில் இடம்பெறாததுக்கு இது தான் காரணமா?

T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

T20 உலகக்கோப்பை!!

T20 உலக கோப்பை தொடருக்கான பலமான இந்திய அணியை BCCI நேற்று அறிவித்தது. இதில் பல முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு பதில் பல இளம் வீரர்களுக்கு உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி பேட்டிங் வரிசையில் பல திறமையான வீரர்கள் களமிறங்க உள்ளனர். அதே போன்று பந்து வீச்சில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும், முன்னணி வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏட்படுத்தியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்கு காரணம் அஸ்வின் தான் என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் வெயில் அதிகமாக இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் வேணும் என சில தேர்வர்கள் கூறினர். அந்த சுழற்பந்து வீச்சாளருக்கான இடத்தில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். அப்போது தேர்வர்களிடையே ஏற்பட்ட விவாதத்தில் அஸ்வினா அல்லது ஷமியா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பயிற்சியாளர் ராகுல் மற்றும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அஸ்வின் பக்கம் சாய்ந்தனர். இதனால் தான் முகமது ஷமிக்கு T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் அவரை பேக்கப் வீரராக அணியில் எடுத்துள்ளனர். ஒரு வேலை போட்டியின் போது எந்த பந்துவீச்சாளர்கள் சொதப்பினாலும் அவர்களுக்கு பதில், முகமது ஷமி அணியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here