ரியல்மி X 7 ஸ்மார்ட்போன் சீரிஸ் – விலை மற்றும் அம்சங்கள் வெளியீடு!!

0

இந்தியாவில் வரும் 2021ஆம் ஆண்டில் வெளியாகப் போகும் ரியல்மி X 7 ஸ்மார்ட்போன் சீரிஸின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாடல்கள் 5ஜி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி சீரிஸ்:

தற்போது வரும் புது ஆண்டில் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனமும் தங்களது புதிய மாடல் போன்களை வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் பயனர்களோ எந்த போன் வாங்குவது என்று குழப்பத்தில் உள்ளார்கள் என்றே சொல்லலாம். தற்போது இந்த போட்டியில் ரியல்மி நிறுவனமும் இணைந்துள்ளது.

ரியல்மி 7 5ஜி:

6.50 இன்ச் டிஸ்பிளே, 16MP செல்பி கேமராவும், பின்பக்கத்தில் 48MP+8MP+2MP+2MP என்ற 4 கேமராக்களும் உள்ளன. Android 10 ஓஎஸ், 1080×2400 , 5000mAh பேட்டரி ஆகிய வசதிகளையும் பெற்றுள்ளது. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் உடன் இந்திய மதிப்பில், சுமார் ரூ.26 ஆயிரம் ஆக விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ரியல்மி X 7 ப்ரோ:

6.55 இன்ச் டிஸ்பிளே, 32MP முன்பக்க கேமராவும், பின்பக்கத்தில் 64MP+8MP+2MP+2MP என்ற 4 கேமராக்களும் உள்ளன. Android 10 ஓஎஸ், 1080×2400 pixels, 4500mAh பேட்டரி ஆகிய வசதிகளையும் பெற்றுள்ளது. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் உடன் இந்திய மதிப்பில், சுமார் ரூ.39 ஆயிரம் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போதும் ரியல்மி ஸ்மார்ட்போன் என்றாலே விலை கம்மியாகத் தான் இருக்கும். தற்போது இரண்டு மாடல்களும் விலை அதிகமாகவுள்ளது. இதனால் மக்களை இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியவில்லை. இது குறித்து ரியல்மி நிறுவனம், அம்சங்களுக்கு ஏற்ப விலை இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here