கவர்ச்சிகரமான வண்ணங்களில் ‘ரியல்மி பட்ஸ் ஏர் நியோ’ – இந்தியாவில் அறிமுகம்..!

0

ரியல்மி நிறுவனம் பட்ஸ் ஏர் நியோ என்கிற புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸை போன்றே இருக்கும் இது கவர்ச்சிகரமான வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

ரியல்மி ஏர் பட்ஸ்:

13 மிமீ டிரைவர் எல்சிபி மல்டி லேயர் வசதியுடன், 5.0 ப்ளூடூத் இணைப்புடன் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸில் டச் கண்ட்ரோல் வசதி, இதில் இருமுறை டேப் செய்தால் பாட்டு பாடும், மூன்று முறை டேப் செய்தால் அடுத்த பாடல் பாடும் வசதியுடன் வந்துள்ளது.

இது வெளிப்புற சத்தத்தை ரத்து செய்யும் மைக்ரோஃபோன்கள், ஒவ்வொரு ட்ஸும் 4.1 கிராம் எடையும், சார்ஜிங் கேஸ் 30.5 கிராம் எடையும் கொண்டுள்ளது.

  • வண்ணங்கள் – வெள்ளை, பச்சை, சிவப்பு
  • விலை – ரூ. 2,999
  • விற்பனை – பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனை. விரைவில் ஸ்டார்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
  • சார்ஜிங் கேஸ் – 17 மணிநேர பிளேபேக் பேட்டரி
  • சார்ஜிங் – டைப் சி அல்லது வயர்லெஸ் சார்ஜிங்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here