
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே நிர்வாகம்
நாடு முழுவதும் பெரும்பாலான பயணிகள், தங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப ரயில்வே நிர்வாகமும் பல்வேறு வசதிகளையும், சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி இருக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு ரயில்வே துறைக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது மூத்த குடிமக்களுக்கு ரயில் நிர்வாகம் பல சலுகைகளை அறிவித்திருந்தது. அதில் ஒன்று தான் கட்டண சலுகை. இச்சலுகை குளிர்சாதன பெட்டிகள், 2 ம் தர பெட்டிகளை தவிர்த்து மற்ற பெட்டிகளில் 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டண குறைக்க பட்டிருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் ரயில்வே நிர்வாகம் பொருளாதார இழப்பை சந்தித்ததால் மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகை நிறுத்தப்பட்டது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.