மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை அசின்.., ஏக குஷியில் ரசிகர்கள்!!

0
மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை அசின்.., ஏக குஷியில் ரசிகர்கள்!!
மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை அசின்.., ஏக குஷியில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில், கேரளாவில் இருந்து வந்து ஏராளமான நடிகைகள் சாதித்து வருகின்றனர். அவர்களின் பெயர்களை லிஸ்ட் போட்டு சொல்லலாம். அந்த வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் அசின். இவர் கடந்த 2004ம் ஆண்டு வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் கேரளத்து பெண்ணாகவே அசின் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

Ghajini' फेम एक्ट्रेस असिन ने शादी के बाद फिल्मों से बना ली थी दूरी, देखें खूबसूरत PHOTOS - ghajini fame actress asin away from films after marriage see beautiful photos an –

இதை தொடர்ந்து, தமிழ் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட நடிகை அசினுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யாவுடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் அசின். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபருடன் திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

வைகைப்புயல் வடிவேலு எடுத்த திடிர் முடிவு – இது நமக்குத் தேவையே இல்லை என திட்ட வட்ட அறிவிப்பு!!

இந்நிலையில் குடும்பத்தை பார்த்து கொள்வதில் அசின் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார். இருப்பினும் தற்போது அசின் தமிழ், ஹிந்தி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பட வாய்ப்புகள் வருவதாகவும், டைரக்டர்களிடம் கதைகள் கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் நடிகை அசின் ரசிகர்கள் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here