ஐபிஎல் கோப்பைக்கான கனவே RCB நெருங்குமா?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று யுத்தம்!!

0
ஐபிஎல் கோப்பைக்கான கனவே RCB நெருங்குமா?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று யுத்தம்!!
ஐபிஎல் கோப்பைக்கான கனவே RCB நெருங்குமா?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று யுத்தம்!!

ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் சுற்றுகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இதுவரை தலா 12 போட்டிகளில் விளையாடி உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இன்று தங்களது 13 வது லீக் போட்டியில் மோத உள்ளன. இதில், RCB அணி +0.166 ரன் ரேட் மற்றும் 12 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், SRH அணியோ 8 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே SRH அணி இழந்த நிலையில், இன்று RCB அணிக்கு எதிராக வெற்றிக்காக மட்டுமே விளையாடும். ஆனால், RCB அணியோ பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற SRH அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக, ஆரம்ப முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை RCB அணி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் IPL பிளே ஆப் போட்டிகள்…, டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்!!

RCB அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

விராட் கோலி , ஃப் டு பிளெசிஸ்(சி) , மைக்கேல் பிரேஸ்வெல் , எம் கே லோம்ரோர் , ஜிஜே மேக்ஸ்வெல் , டபிள்யூடி பார்னெல், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், எச்வி பட்டேல், கே வி சர்மா, முகமது சிராஜ்.

SRH அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(சி), ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், சன்விர் சிங், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here