ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் RCBக்கு இத்தனை சாதனையா??…, பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து அபாரம்!!

0
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் RCBக்கு இத்தனை சாதனையா??..., பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து அபாரம்!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் RCBக்கு இத்தனை சாதனையா??..., பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து அபாரம்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான ஒரு போட்டியால் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதாவது, RCB மற்றும் RR அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், RCB அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, RCBயின் பந்து வீச்சு மற்றும் பக்காவான பில்டிங்கால் 10.3 ஓவரிலேயே 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், RCB அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதுடன் -0.345 % லிருந்து +0.0.166% NRR மாக மாறி புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திய CSKயின் சிவம் துபே…, இப்படி ஒரு சாதனையில் முதலிடம் பிடித்து அசத்தல்!!

இந்த போட்டியில் மட்டும், RR அணியில் 4 மற்றும் RCBயில் 1 என 5 டக்அவுட்கள் பதிவாகி உள்ளது. இதில், RCBயின் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானது மூலம், ஐபிஎல் அரங்கில் அதிக டக் (16) அவுட்டான ரோஹித் சர்மாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

ஓட்டுமொத்த ஐபிஎல் தொடரில், RCB அணிக்கு எதிராக 59 ரன்கள் எடுத்த RR யின் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக மாறி உள்ளது.

இந்த போட்டியில், விராட் கோலி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எம்.ஆசிப் கேட்ச் பிடித்து விக்கெட் எடுத்ததன் மூலம், விக்கெட் கீப்பரை தவிர்த்து ஐபிஎல் அரங்கில் அதிக (104) கேட்ச்களை பிடித்த 2வது வீரரானார். முதலிடத்தில் ரெய்னா 109 கேட்ச்களுடன் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here