ஐபிஎல் 2023: ப்ரோமோ ஷூட்டிங்கில் விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
ஐபிஎல் 2023: ப்ரோமோ ஷூட்டிங்கில் விராட் கோலி..., வைரலாகும் வீடியோ உள்ளே!!
ஐபிஎல் 2023: ப்ரோமோ ஷூட்டிங்கில் விராட் கோலி..., வைரலாகும் வீடியோ உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானதை அடுத்து, தற்போது 2வது ப்ரோமோக்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் ப்ரோமோ:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதனால், இந்த தொடர் நடைபெற இருப்பதற்கான மைதானங்கள் சீரமைப்பு பணிகள் குறித்தும், போட்டியை கண்டு ரசிப்பதற்கான டிக்கெட்டுகள் குறித்தும் பல அப்டேட்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான முதல் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த முதல் ப்ரோமோவில், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் கேப்டன்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாக அமைத்தது.

IPL 2023 home games: மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!!

இதையடுத்து, CSK, RCB, SRH உள்ளிட்ட மற்ற அணிகள் பங்கு பெற்றுள்ள ஐபிஎல் ப்ரோமோ எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி வந்தது. இந்நிலையில், RCB அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here