என்னடா பொசுக்குன்னு குடும்பத்தை இழுத்துடீங்க…..,RCB ரசிகர்கள் செய்த காரியம்…,

0
என்னடா பொசுக்குன்னு குடும்பத்தை இழுத்துடீங்க.....,RCB ரசிகர்கள் செய்த காரியம்...,
என்னடா பொசுக்குன்னு குடும்பத்தை இழுத்துடீங்க.....,RCB ரசிகர்கள் செய்த காரியம்...,

நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், மும்பை அணி பிளேஆப் வாய்ப்புக்காக பெங்களூரு அணியை எதிர்பார்த்திருந்தது.

தொடர்ந்து, மழை காரணமாக தாமதமாக துவங்கிய போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நேரடியாக நுழைந்துவிடக்கூடிய சூழல் இருந்தது. ஆனால், இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால், மும்பை அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2,000 மறுப்பா?? அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இப்போது, RCB அணியின் IPL கோப்பை கனவு கலைந்ததைக் கண்ட ரசிகர்கள் குஜராத் அணியை விமர்சிக்கத் துவங்கினார்கள். அந்த வகையில் குஜராத் அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சுப்மான் கில்லின் சகோதரி வெளியிட்ட புகைப்படத்திற்கு அவரது குடும்பத்தாரை கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர் RCB ரசிகர்கள். குஜராத் அணி வெற்றி பெற்றதால் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதை கண்டிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here