லோன் ஆப்பிடம் கடன் வாங்காதீர் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

0

அங்கீகாரம் இல்லாத செயலி மூலம் கடன் பெற்று துன்பப்படாதீர்கள் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. சென்னையில் ஆப் மூலம் கடன் வாங்கி அவதிப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லோன் ஆப்:

தற்போது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஏழைகளின் பணத்தேவையை புரிந்து கொண்டு சில அங்கீகாரம் இல்லாத போலியான செயலியின் முலம் கடனுக்காக பணத்தை கொடுத்துவிட்டு அதை வாங்குவதற்காக பல தவறான விபரீத செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தவிர்க்க ரிசர்வ் வங்கி பல எச்சரிக்கைகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்??

தற்போது இதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய ரங்கநாதன் என்னும் வாலிபர், தான் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம், அவரின் நண்பர்கள் அனைவருக்கும் ‘கடனை செலுத்தாதவர்‘ என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதால், அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். எனவே அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்பிடம் இருந்து கடன் பெறவேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here