ஜடேஜா அணிக்கு திரும்புவது எப்போது?? பதில் அளித்த ஆல் ரவுண்டர் கிங் அஸ்வின்!!

0
ஜடேஜா அணிக்கு திரும்புவது எப்போது?? பதில் அளித்த ஆல் ரவுண்டர் கிங் அஸ்வின்!!
ஜடேஜா அணிக்கு திரும்புவது எப்போது?? பதில் அளித்த ஆல் ரவுண்டர் கிங் அஸ்வின்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய அஸ்வின், ஜடேஜா இந்திய அணிக்கு திரும்புவது குறித்தும் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார்.

அஸ்வின்:

இந்திய அணி வரும் பிப்ரவரி மாத இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதியாகும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி ஆல்ரவுண்டர்களான அஸ்வின் இந்த தொடர் குறித்தும், ஜடேஜாவின் வருகை குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

MCA விருதுகளை அள்ளிய மூன்று இந்திய வீரர்கள்…, யார் யார் என்ற முழு விவரம் உள்ளே!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடருக்கு இப்போதிலிருந்தே தயாராகி வருவதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய அணி எவ்வாறு விளையாடுகிறது என்ற நுணுக்கத்தையும் பார்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஜடேஜா இந்த தொடருக்கான சரியான நேரத்தில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here