என்ன எல்லாத்தையும் Open-ஆ பேசுறாங்க – திருமண சர்ச்சைக்கு பதிலளித்த ரவீந்தர், மகாலட்சுமி!

0

அண்மையில் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரவீந்தர் – மகாலட்சுமி:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு அதிகமாக வில்லி கதாபாத்திரமே கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் திருமணத்திற்கு ஏராளமான நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் சிலர் வயதை மையமாக வைத்து கலாய்த்து வந்தனர். இந்நிலையில் ரவீந்தர் தனது பேட்டியின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, நானும் மகாலட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம். தற்போது கல்யாணத்துக்கு காலம் நெருங்கியதால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் எனக்கு 52 வயது என்று தவறாக செய்திகள் பரவி வருகிறது. என்னுடைய தற்போது வயது 38 தான் ஆகிறது. அதை விட ஒன்று நான் மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மை அல்ல. எங்கள் இருவருக்கும் அவ்வளவு வயது வித்தியாசமெல்லாம் இல்லை எனக் வெளிப்படையாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரவீந்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here