‘உங்க வாழ்க்கையில இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க’ – நெட்டிசன்களளுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் மகாலக்ஷ்மி!!

0
கர்ப்பமாக இருக்கும் மஹாலக்ஷ்மி?? ஆதாரத்துடன் வெளியான வீடியோ!!
கர்ப்பமாக இருக்கும் மஹாலக்ஷ்மி?? ஆதாரத்துடன் வெளியான வீடியோ!!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் குறித்து பேசப்படும் மோசமான கமெண்ட்ஸ் குறித்து வீடியோவில் பேசியுள்ளனர்.

ரவீந்தர்-மகாலட்சுமி:

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இன்று வரை சின்னத்திரையில் அற்புதமாக நடித்து வருபவர் தான் நடிகையான விஜே மகாலட்சுமி. மேலும் பத்து வருடங்களாக சின்னத்திரையில் பணியாற்றிய நிலையில் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற ஆறு வயது ஆண்மகன் இருக்கிறான். அதனை தொடர்ந்து அனிலை விவாகரத்து செய்து தன் மகனுடன் வாழ்ந்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின்னர் சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் விமர்சகரான ரவீந்தர் உடல் பருமன் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பல பேர் அவர்களை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் திருமணம் குறித்து பேசப்படும் மோசமான கமெண்ட்ஸ் குறித்து வீடியோவில் பேசியுள்ளனர்.

கமெண்ட்கள் ரொம்ப காயங்கள் தரும் அளவிற்கு இருந்து வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மகாலட்சுமி, “எனது கணவரை உருவத்தை வைத்து கிண்டல் செய்யாதீர்கள், இந்த மாதிரி உங்க வாழ்க்கையில் நடந்த இப்படித்தான் செய்வீர்களா” என்று பேசியுள்ளார்.

அதன் பிறகு ரவீந்தர் பேசியதாவது, ‘எனது மனைவியை அழுக விடமாட்டேன், அஜித் பட பாணியில் என்னை தாண்டி அழுக வைங்க பார்க்கலாம், என் மனைவிக்காக உடல் எடையை கட்டாயம் குறைப்பேன், இது எங்க வாழ்க்கை நாங்க நல்லா இருப்போம், அதிகமாக காலங்கள் அன்போடு வாழ்வோம், இதற்காக யாரும் வருத்தமடைய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here