ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்திய பவுலர்…, இன்னும் 7 விக்கெட் தான் வேணுமா??

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்திய பவுலர்..., இன்னும் 7 விக்கெட் தான் வேணுமா??
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்திய பவுலர்..., இன்னும் 7 விக்கெட் தான் வேணுமா??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளரான அஸ்வின், முன்னாள் வீரர்களின் சாதனையை முறியடிக்க தயாராகி வருகிறார்.

அஸ்வின்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில், இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பலவித சாதனைகளை படைத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதே போன்று, ஆல் ரவுண்டரான, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி மூலம் முன்னாள் வீரர்களின் சாதனையை முறியடிக்க தயாராகி வருகிறார். அதாவது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 18 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் 3 வது இடத்தில் உள்ளார்.

T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்த பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், ஹர்பஜன் சிங் 18 போட்டிகளில் 95 விக்கெட்டுகளை கைப்பற்றி 2 வது இடத்திலும் உள்ளனர். எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் அஸ்வின், 7 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம், ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டால், அனில் கும்ப்ளே சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here