50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தற்போது இந்திய மண்ணில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இந்த நான்கு அணிகளில் எந்த அணி உலக கோப்பை பட்டத்தை சூடப்போகுது என்பது தெரியவில்லை. இப்படி இருக்கையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர் கூறியதாவது தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் உலக கோப்பையை வெல்வார்கள் என்று தான் தெரிகிறது. ஒரு வேலை இந்த உலகக்கோப்பை தொடரை இந்திய அணி தவறவிட்டால் மீண்டும் உலக கோப்பையை வெல்ல பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். எனவே இந்த போட்டியில் அனைத்து வீரர்களும் கவனமுடன் ஆட வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.