என்ன என்ன பீலிங்கு., தோனியை மிஸ் பண்ணும் ரவி சாஸ்திரி.., உங்களுக்குள்ள அப்படி என்ன கனெக்சன்!!

0
தோனியை மிஸ் பண்ணும் ரவி சாஸ்தி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் தோனி இல்லாதது வருத்தமளிப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

தோனி VS ரவி சாஸ்திரி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் T20 போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் போட்டியில் இந்தியா அதிக ரன்கள் குவித்த போதிலும், சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த தோல்விக்கு தினேஷ் கார்த்திக் தான் காரணம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது ஆட்டத்தின் 5 வது ஓவரில் யுவேந்திர சாஹல் வீசிய பந்தை, ஆஸ்திரேலிய வீரர் பலமாக அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து மிஸ்ஸாகி பேடில் பட்டது. ஆனால் அதை இந்திய வீரர்கள் கவனித்தும் யாரும், அமைப்பையரிடம் முறையிட்டு அவுட் கேட்கவில்லை. மேலும் விக்கெட் கீப்பரான தினேஷ் இதை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை.

இந்திய வீரரின் சிறப்பான ஆட்டம்.., பாராட்டி தள்ளிய கிராண்ட் மாஸ்டர்!!

இதை மட்டும் தினேஷ் கார்த்திக் கவனித்து இருந்தால் ஆஸ்திரேலிய வீரர் ஆட்டமிழந்திருப்பார். ஆனால் தினேஷ் அதை செய்யவில்லை. இதனால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும் முன்னாள் விக்கெட் கீப்பரான தோனி மட்டும் இருந்திருந்தால் இதுபோன்ற தவறு நடந்திருக்காது. எனவே இந்த இடத்தில் தோனியை மிஸ் பண்ணுவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here