Thursday, April 22, 2021

ஐஸ்கிரீமில் எலி மருந்து – கேரளாவில் இருவர் பரிதாப பலி!!

Must Read

கேரள மாநிலத்தில் எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை உட்கொண்டதால் இரண்டு பேர் பரிதாபமாக தங்களது உயிரை இழந்துள்ளனர்.

கேரளா

இந்தியாவில் கடந்த சில காலமாகவே தற்கொலைகள் அதிகமாகி வருகிறது. இதற்கு பலவேறு நடவடிக்கைகள் எடுத்தும் அது குறைந்தபாடில்லை. தற்போது இதேபோல் கேரளாவில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரது முயற்சியினால் இரண்டு பேர் பரிதாபமாக உயிரை இழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் காசராகாட் என்னும் மாவட்டத்தில் உள்ள கான்கண்காட் என்னும் பகுதியில் வசித்து வந்தார் வர்ஷா. இவருக்கு 25 வயது. இவர் சில தினங்களாகவே சில பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து இவர் தான் சாப்பிடும் ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டார். பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட வர்ஷா மயக்க நிலையில் மீதமுள்ளதை தனது அறையில் வைத்து சென்றார். அதனை பார்த்த அவரது ஐந்து வயது மகன் அந்த ஐஸ்கிரீமை எடுத்து உண்டான். மேலும் அதனை வர்ஷாவின் சகோதிரியும் சாப்பிட்டுள்ளார். இருவரும் ஐஸ்கிரீமை சாப்பிட்ட பின்பு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். பின்பு அன்று இரவு வர்ஷாவின் மகன் கடுமையாக வாந்தி எடுத்தான். அதனால் அவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் உயிர் இழந்தான்.

கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

இதனை தொடர்ந்து வர்ஷாவின் தங்கையும் உடல்நலம் பாதிக்கப்பட்டாள். பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 1 வாரம் சிகிச்சை எடுத்த நிலையில் அவளும் பரிதாபமாக உயிர் இழந்தார்.தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட வர்ஷா நலமாக இருந்ததால் இதனை ஆரம்பத்தில் வெளியே சொல்லவில்லை. பின்பு போலீஸ் விசாரணையில் இதனை வர்ஷா ஒப்புக்கொண்டார். தற்போது இவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

குழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ் – “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி!!

குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் அதே சமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் உடலுக்கு வலுவும், டேஸ்டியாக இருக்கும் "மீல் மேக்கர் சில்லி" ரெசிபி எப்படி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -