தமிழக ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய மாற்றங்கள் – கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் திட்டவட்டம்!!

0
தமிழக ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய மாற்றங்கள் - கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் திட்டவட்டம்!!
தமிழக ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய மாற்றங்கள் - கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வசதி உள்ளிட்டவை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை:

தமிழக கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று, திருச்சியில் கல்லுக்குழி ரேஷன் கடை மற்றும் சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” திட்டத்தின் படி, திருச்சி மாவட்டத்தில் 75 நியாய விலை கடைகள் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், மேலும் புதிதாக கட்டக்கூடிய நியாய விலை கடைகளில் கழிப்பறை வசதி, வயதானவர்கள் உட்கார ஏதுவாக வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வசதி ஆகியவற்றை விரைவில் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதை தொடர்ந்து அண்மைகாலமாக, நியாய விலை கடைகளில் இருந்து அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே அவற்றை தடுக்கும் வகையில், சிவில் சப்ளை சி.ஐ.டி.க்கு தனி பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவிலும் தொடங்கிய பொருளாதார மந்த நிலை.,ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு!!

இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில்,3 மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷன் பொருட்களை வாங்காத நபர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக வந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்த அவர் ரேஷன் பொருட்கள் வேண்டாம் என நினைப்பவர்கள்,”கௌரவ கார்டு” பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here