ரேஷன் கடைகளில் நடந்த ஊழல்.. முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் தமிழக அரசு!!

0

ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களில் இது சம்மந்தப்பட்ட புகார்கள் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில், மானிய விலையில் மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை, பதுக்கல், கடத்தல் மற்றும் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ரேஷன் திட்ட பொருட்கள் கடத்தல், பதுக்கலை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 3 மாதங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,144 வழக்குகள் பதிவு செய்யப்ட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here