ரேஷன் தாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி ‘கியூ ஆர் கோடு’ மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்!! 

0

தமிழகத்தில் ரேஷன் அட்டை தாரர்கள் இனி ‘கியூ ஆர் கோடு’ மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரேஷன் அட்டை

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் தமிழக அரசு அளித்து வருகிறது. இதே போன்று பல்வேறு நவீன வசதிகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட முறைகேடுகளை தடுக்க கைரேகை வைத்தல் ஆன்லைனிலேயே பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்போது இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு சூப்பர் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் தற்போது வரை ரொக்க பணம் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இனி கியூ ஆர் கோடு வழியாக பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.

தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய நீரஜ் சோப்ரா…, டயமண்ட் லீக்கில் முதல் சுற்றில் அசத்தல்!!

இந்த திட்டத்தை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திட்டம் தமிழகத்திலே முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here