ரேஷன் அட்டைதரர்களே…, உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
ரேஷன் அட்டைதரர்களே..., உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் அட்டைதரர்களே..., உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலைக்கு ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சிறப்பாக வழங்கி வருகிறது. மேலும், ஏழை எளிய மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தில் எந்த பகுதியிலும் ரேஷன் பொருட்கள் வாங்கி கொள்ளவதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தையும் அனைத்து மாநில அரசும் செயல்படுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த திட்டத்தின் மூலம், ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில், ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தையும் அரசு தொடங்கி உள்ளது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுலாவால் வந்த வினை.., அல்லோல்படும் பெண்கள்.., அதிர்ச்சி தகவல்!!!

அரசு அறிவிக்கும் இந்த ரேஷன் பொருட்களை, பொதுமக்கள் வாங்கி பயன்பெற ரேஷன் கடைகள் முதலில் திறந்திருக்க வேண்டும். இதனை மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளவும் அரசு வழிவகை செய்துள்ளது. அதாவது, இன்றைய தினம் ரேஷன் கடை திறந்திருக்குமா? என்பதை அறிய 9773904050 நம்பருக்கு SMS செய்தால் போதும். இதன் வாயிலாக மக்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். மேலும், 9773904050 இந்த எண்ணுக்கு PDS 101 என குறிப்பிட்ட SMS அனுப்பினால் இன்றைய தினம் என்னென்ன பொருட்கள் ரேஷன் கடைகளில் உள்ளது என அறிந்து கொள்ளலாம். இதனை, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் சண்முகவேல் பொதுமக்கள் பயன் பெற தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here