ரேஷன் பொருட்கள் வாங்குவது இனி ரொம்ப ஈஸி…, கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ!!

0
ரேஷன் பொருட்கள் வாங்குவது இனி ரொம்ப ஈஸி..., கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ!!
ரேஷன் பொருட்கள் வாங்குவது இனி ரொம்ப ஈஸி..., கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இதனுடன் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டமும் செயல்பட்டு வருவதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் இதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் கேழ்வரகு வழங்கும் திட்டம் மற்றும் பண பரிவர்த்தனையை எளிமையாக்கும் டிஜிட்டல் முறையான UPI திட்டம் ஆகியவை ஒரு சில மாவட்டங்களில் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், UPI திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் கவனத்திற்கு…, பரவும் புதிய வகை வைரஸ்…, தேசிய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை!!

மேலும், சிறிய மளிகைக் கடைகளில் கூட இருக்கும் இந்த UPI திட்டத்தை தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த UPI பண பரிவர்த்தனையை, படிப்படியாக விரிவுப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 33,841 நியாய விலைக் கடைகள், 363 பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 41 கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here