ரேஷன் கார்டில் இந்த updateஐ செய்யணுமா? வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்! எளிய வழிகள் இதோ!!

0
ரேஷன் கார்டில் இந்த updateஐ செய்யணுமா? வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்! எளிய வழிகள் இதோ!!
ரேஷன் கார்டில் இந்த updateஐ செய்யணுமா? வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்! எளிய வழிகள் இதோ!!

ரேஷன் கார்டில் இறந்தவரின் பெயரை, நீக்குவதற்கு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்ற செயல்முறையை விரிவாக பார்க்கலாம்.

விரிவான வழிமுறைகள் :

நாடு முழுவதும், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பயனர்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல், அரசின் அனைத்து துறைகளிலும் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு திகழ்கிறது. தற்போது இந்த ரேஷன் கார்டில், இறந்தவர் பெயரை நீக்குவது அரசின் உத்தரவுப்படி மிகவும் அவசியம். அதற்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது வீட்டில் இருந்தபடி, ரேஷன் கார்டில் இறந்தவரின் பெயரை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம். மாநில ரேஷன் வெப்சைட் பக்கத்திற்கு சென்று, முதலில் Login செய்ய வேண்டும். பின்பு ரேஷன் கார்டில் மாற்றங்கள் செய்வதற்கான பகுதிக்கு சென்று, யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ? அதில் மாற்றம் செய்ய வேண்டும்.

பின்பு அதற்கான இறப்பு சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் தகுந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை முடித்தால் வீட்டில் இருந்தபடியே ஈஸியா இதனை செய்து விடலாம். ஒருவேளை இதை ஆஃப்லைனில் செய்ய விரும்பினால் உணவுத்துறை அலுவலகத்துக்கு சென்று இது சார்ந்த ஆவணங்களை கொடுத்து நேரில் விண்ணப்பிக்கலாம். ஆனால் கட்டாயம் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் அப்டேட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here