
ஏழை எளிய மக்களுக்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் மானிய விலைக்கு வழங்கி வருகிறது. இதில், உத்திரப் பிரதேச மாநில அரசானது இலவச ரேஷன் திட்டத்தையும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி, தேர்வு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்த்யோதயா என்ற அட்டை வழங்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அரிசி மற்றும் கோதுமையுடன் சேர்த்து ஒரு கிலோ சர்க்கரையும் இலவசமாக வழங்க உள்ளதாக லக்னோ டிஎஸ்ஓ விஜய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம், 21 கிலோ அரிசி, 14 கிலோ கோதுமையுடன் ஒரு கிலோ சர்க்கரையும் அந்த்யோதயா அட்டைதாரர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வீடு குத்தகைக்கு விடப்படும் என ரூ.4 லட்சம் மோசடி., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!