ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலானோர் ரேஷன் சலுகைகளை பெற போலி நபர்களை கார்டில் இணைத்து வருவதாக ஆக்ராவில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து போலி நபர்களை ரேஷன் கார்டில் நீக்கும் பொருட்டு பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆக்ரா மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அடுத்த மாதம் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின் படி, மாவட்டத்தில் உள்ள 31 லட்சம் பேர் எங்கிருந்தாலும், ஒரு முறை வந்து பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அப்படி வராதவர்களின் ரேஷன் அட்டைக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.