ரேஷன் அட்டைதாரர்களே…, இத செய்யலேன்னா உங்க கார்டு ரத்து செய்யப்படும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!! 

0
இந்திய பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் செல்வந்தர்கள் பலர், ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று அதிக விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சிலரோ ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காமல் உள்ளதால் ரேஷன் ஊழியர்கள் வெளியில் பொருட்களை விற்று விடுகின்றனர். இதனால், உத்திரப்பிரதேச மாநில அரசு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது, குடும்ப வருமானம் ஆண்டுக்கு கிராமத்தில் உள்ளவர்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கும், நகரத்தில் உள்ளவர்களுக்கு ரூ. 3 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டுகள் அதிரடியாக நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும், வீட்டில் சொந்தமாக கார் அல்லது டிராக்டர் வைத்திருந்தாலும்,  5 கிலோ வாட் திறன் இருக்கும் ஜெனரேட்டர், வீட்டில் ஏசி வைத்திருந்தாலும் ரேஷன் கார்ட்டை தகுதி நீக்கம் செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here