தமிழகத்தில் வேலை நிமித்தமாக பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி உள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெறும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புலம்பெயர் தொழிலாளருக்கு ரேஷன் கார்டு வழங்க விண்ணப்பம் விநியோகிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், “”இ- ஷ்ரம்” இணையத்தில் பதிவு செய்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பணி நிமித்தமாக தற்காலிகமாக குடி இருப்பவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியேறியவர்கள் புலம்பெயர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி சரிபார்த்த பிறகு பரிசீலிக்கப்படும்.” என கூறியுள்ளார்.