ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!!

0

குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கப்படும் இலவச பொங்கல் தொகுப்பு பை குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பு வெளியீடு:

தைப்பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பாக இலவசமாக பொங்கல் சாமான்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும்.  இதேபோல், இந்த ஆண்டு வருகிற பொங்கலுக்கு, இந்த தொகுப்பு பொருட்கள் அடங்கிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பச்சரிசி, முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய், நெய், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், ரவை, உப்பு, மிளகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, புளி, கோதுமை மாவு ஆகிய 20 பொருட்கள் இந்த தொகுப்பில் அடங்கும்.

இதற்காக 1088 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் செலவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பொருட்கள், 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களோடு சேர்த்து, இலங்கை தமிழர்களுக்கும், இலங்கை வாழ் அகதிகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here