Wednesday, August 4, 2021

ராட்சசன் படம் ஹிந்தியில் ரீமேக் – பட குழுவினர் அறிவிப்பு!!!

Must Read

நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலா பால் நடித்த மாபெரும் மெகா ஹிட்டான படம் ராட்சசன். இப்பொழுது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் பண்ணப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன்…

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்குமார் இயக்கி நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும் மற்றும் நடிகை அமலா பால் கதாநாயகியாகவும் நடித்த படம் ராட்சசன். இந்த படம் தமிழில் பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் கொடுத்த படமாகும் அதுமட்டுமில்லாமல் நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் பள்ளி சிறுமிகளை கடத்துவதுபோலும் வில்லன் கதாபாத்திரத்தை ஒரு சைக்கோ போலவும் காட்டியிருந்தார் இயக்குனர் ராம்குமார். இந்த படத்தை பார்த்த தெலுங்கு மற்றும் ஹிந்தி இயக்குனர்கள் இந்த படத்தை அவர்களது மொழியில் ரீமேக் பண்ண திட்டமிட்டுள்ளனர். படத்தின் வெற்றி விழா மேடையில் இந்த படத்தின் மியூசிக் இயக்குனர் ஜிப்ரானிடம் படத்தின் உரிமங்கள் பற்றி விசாரித்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு எடுக்க உள்ள ரீமேக் ராட்சசன் படத்தில் நடிகர் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கவுள்ளாராம்.

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன்...
ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன்…

ராஜேஷ் வர்மா தான் ஹிந்தியில் தயாரிக்கப்போகிறாராம் இந்த ஹிந்தி ரீமேக்கில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இதைத்தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா தான் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வந்தது அனால் அது உண்மையில்லை போல அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் ஒப்பந்தங்களை பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஒலிம்பிக் போட்டி 2021: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா படைத்த சாதனை!!

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த போட்டிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -