இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு – உலக நாடுகள் அதிர்ச்சி!!

0
இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு - உலக நாடுகள் அதிர்ச்சி!!
இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு - உலக நாடுகள் அதிர்ச்சி!!

இறந்து போனதாகக் கருதப்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மன் அல் ஜவாஹிரி வீடியோவில் தோன்றி பேசிய காட்சி உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய வீடியோ:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை கோபுரத்தின் மீது அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பெரும் இழப்பாக கருதப்பட்ட இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பழி தீர்ப்போம் என சம்பந்தப்பட்ட நாடான அமெரிக்கா அறிவித்து இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த இதன் தலைவன் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஜவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு - உலக நாடுகள் அதிர்ச்சி!!
இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு – உலக நாடுகள் அதிர்ச்சி!!

இதன் பிறகு, அவர் தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர்களை விலையாக வைத்தது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஜவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, இவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு - உலக நாடுகள் அதிர்ச்சி!!
இறந்ததாக கருதப்பட்ட தீவிரவாத தலைவன் வீடியோ பேச்சு – உலக நாடுகள் அதிர்ச்சி!!

இந்த நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 20 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், இறந்ததாக கருதப்பட்ட அய்மன் அல் ஜவாஹிரி ஒரு வீடியோவில் தோன்றி பேசினார். கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் அல்கொய்தா படைகள், ரஷ்ய படைகள் மீது நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அந்த வீடியோவில் பேசியுள்ளார். இறந்ததாக கருதப்பட்ட நபர் வீடியோவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here