சமந்தா, காஜல் அகர்வாலுக்கு விபூதி அடித்த ராஷ்மிகா மந்தனா.. பிரமிப்பில் திரையுலகம்!!

0

நடிகை ராஷ்மிகா மந்தானா, முன்னனி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளி சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் 1.9 கோடி பின்தொடர்பவர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தானா, கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் இவர் நடிப்பில் விஜய் தேவராகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்து கலக்கிய இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் பாலிவுட்டில் தன் கவனத்தை திரும்பியுள்ள ராஷ்மிகா சில நாட்களுக்கு முன்பு மும்பையில் வீடு ஒன்றை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது இவர் 1.9 கோடி Followersகளை பெற்று சமந்தா, காஜல் அகர்வாலை முந்தி அதிக Followersகளை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here